மாணவ வழிகாட்டிப் பயிற்சி நமது மரபுடைமையைக் காக்கப் பங்காற்றுங்கள்

நீங்கள் கதை சொல்வதில் ஆர்வமுள்ள வரலாற்றுப் பிரியரா?

  • எங்கள் நிலையத்தில் மாணவ வழிகாட்டியாகச் சேருங்கள். நிலையத்தின் நிரந்தரக் காட்சிக்கூடங்களின் கதைகளைக் கொண்டு உங்களுக்கான வழிகாட்டி உரையை நீங்களே எழுதலாம்.

நீங்கள் பயிற்சித் திட்டத்தை முடித்த பிறகு, வருகையாளர்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் எங்களது காட்சிக்கூடங்களைச் சுற்றிக்காட்டி வழிகாட்ட வாய்ப்பு கிடைக்கும்.

நோக்கங்கள்

மரபுடைமையில் ஆர்வம் வளர்த்தல்

இந்தப் பயிற்சித் திட்டம் சிங்கப்பூரின் மரபுடைமையில், குறிப்பாக நமது இந்தியச் சமூகங்களின் வரலாறு, கதைகள் ஆகியவற்றில், ஆர்வத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தன்னம்பிக்கையை வளர்த்தல்

மாணவர்கள் தங்களது எழுத்துத்திறன், பேச்சுத்திறன், தொடர்புத்திறன் ஆகியவற்றை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இந்தத் திறன்கள் அவர்களது தன்னம்பிக்கையை வளர்ப்பதோடு, பொது அரங்கில் பேசுவதற்கும் அன்றாட வாழ்க்கை நடப்புகளுக்கும் துணை புரியும்.

 

விதிமுறைகள்

இந்தப் பயிற்சித் திட்டம், உயர்நிலை 2 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

தலா 3 மணிநேரம் நீடிக்கும் மூன்று பயிற்சி அங்கங்களைத் தொண்டூழியர்கள் வழிநடத்துவார்கள். ஒவ்வோர் அங்கத்திலும் 15 மாணவர்கள் பங்கேற்கலாம்.

பயிற்சித் திட்டம் முழுவதும், மாணவருடன் பள்ளியின் பிரதிநிதி உடனிருக்கவேண்டும், எடுத்துக்காட்டாக ஓர் ஆசிரியர்.

பயிற்சித் திட்டத்தை முடித்து ஓர் ஆண்டுக்குள், பங்கேற்பாளர்கள் குறைந்தது 1 வழிகாட்டிச் சுற்றுலா நடத்தவேண்டும்.

எங்கள் பயிற்சித் திட்டம் பற்றி இங்கே மேலும் தெரிந்து கொள்ளலாம். பயிற்சித் திட்டத்திற்குப் பதிவு செய்ய, nhb_ihc@nhb.gov.sg முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.