மேலோட்டம்

நமது நோக்கம்

இந்திய சமூகத்தின் சரித்திரத்தையும், கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் ஓர் இடம்.

 

நமது குறிக்கோள்

இந்திய மரபுடைமை நிலையத்தை ஒரு முன்னணி மரபுடைமை நிலையமாகவும் சமூகத்தை ஒன்றிணைக்கும் தளமாகவும் உருவாக்குவது!

 

நமது இலக்குகள்

1. சிறந்த அரும்பொருளக நிர்வாகத்தின் மூலம் இந்திய மரபுடைமை நிலையத்தை தலைச்சிறந்த மரபுடைமை நிலையமாக உருவாக்குவது;

2. இந்திய சமூகத்தின் முக்கிய பங்காளிகளுடன் இணைந்தும் ஒத்துழைத்தும் சிங்கப்பூர் இந்திய சமுதாயத்தின் உணர்வை வலுப்படுத்துவது;

3. இந்திய சமூகத்தைப் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி செய்து, அதன் மூலம், இந்திய சமுதாயத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது;

4. நமது வட்டாரம் மற்றும் அனைத்துலக மரபுடைமை நிலையங்களுடனும் அவற்றில் பணி புரியும் வல்லுநர்களுடனும் திட்டமிட்டு பயனுள்ள கூட்டுறவை ஏற்படுத்துதல்;

5. இந்திய மரபுடைமை நிலையத்தின் நிதி, மனித வளங்களையும், மற்றும் அரும் கலைப்பொருட்களையும் திறமையாக பயன்படுத்தி நமது நோக்கம், குறிக்கோள் மற்றும் இலக்குகளை அடைவது.