கல்வி

வகுப்புக்கு வெளியிலான கல்வியை இந்​திய மரபுடைமை நிலையத்​​தில் கற்கலாம்.  எங்களின் ஐந்து நிரந்தரக் காட்சிக்கூடங்களின் ​மூலம் மாணவர்கள் இந்தியக் கலாச்சாரம், பாரம்பரியம், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து​ கொள்ளலாம். ஆரம்பகால இந்தியக் குடியேறிகள், முன்னோடிகள் ஆகியோரின் கதைகளையும் அனுபவங்களையும் ஆராய்வதோடு இப்போதைய சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு அவர்கள் எவ்வாறு பங்களித்திருக்கின்றனர் என்பதையும் தெ​​ரிந்து கொள்ளலாம்.

கைகளால் செய்து பார்த்துக் கற்றுக்கொள்ளும் பல்வேறு கல்விசார் பட்டறைகளையும் நாங்கள் வழங்குகிறோம். பாரம்பரிய கைவினைக் கலைகள், நறுமணப் பொருள்கள், இசை போன்றவற்றில் பட்டறைகள் கவனம் செலுத்தும்.  

 

வருகைக்குத் திட்டமிடுங்கள்

இந்​திய மரபுடைமை நிலையத்திற்கு உங்கள் பள்ளி வருகைக்குப் பதிய விரும்பினால், குழுப் பதிவுப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து​ பூர்த்தி செய்யுங்கள்.  

மேல் விவரங்களுக்கு NHB_IHC@nhb.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு​ கொள்ளுங்கள்.