நகரும் கண்காட்சி
சிங்கப்பூரில் இந்தியர்கள்: சடங்குகள் மற்றும் விழாக்கள்
சிங்கப்பூரின் தெற்காசிய சமூகங்கள் பலவகையானவை. இச்சமூகங்கள் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை மற்றும் நேபாளம் போன்ற துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்துள்ளனர். இருப்பினும், அவர்களுக்கு பொதுவான அடையாளம் தங்களது இடம்பெயர்வு வரலாறு மற்றும் சிங்கப்பூரில் கொண்டாடப்படும் அவர்களின் தனித்துவமான கலாச்சார நடைமுறைகளே ஆகும்.
இச்சமூகங்களின் தனிப்பட்ட விழாக்களும் சடங்குகளையும் பற்றி மேலும் விவரிக்கிறது இந்திய மரபுடைமை நிலையத்தின் முதல் நகரும் கண்காட்சி. இக்கண்காட்சியை உங்கள் இடத்தில் காட்சிக்கு வைக்கவும், மேல் விவரங்களுக்கும் NHB_IHC@nhb.gov.sg - க்கு தொடர்பு கொள்ளவும்.

