சிங்கப்பூர் இந்திய மரபுடைமை

இந்திய மரபுடைமை நிலையத்தின் முதல் வெளியீடு 'சிங்கப்பூர் இந்திய மரபுடைமை' எனும் 556-பக்கங்கள் உள்ளடக்கிய நூல் ஆகும்.

இந்திய சமூகத்தினரின் பரந்த கலாச்சார மரபுடைமையைப் பதிவு செய்யும் வகையில்  நிலையத்தின் நிரந்தரக் காட்சியகம், 300க்கும் மேற்பட்ட காட்சிப் பொருட்கள், புகைப்படங்கள், வரலாற்று ஆவணங்கள் தொடர்பில் கல்விமான்கள், இந்திய மரபுடைமை நிலையக் காப்பாளர்கள் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

இந்நூல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் ராஜேஷ் ராய் மற்றும் ஜப்பானில் ரிட்ஸ்யுமிகான் ஆசிய பசுபிக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஏ.மணி ஆகியோரால் தொகுக்கப்பட்டிருக்கிறது.

இந்நூலை இந்திய மரபுடைமை நிலையத்தின் அரும்பொருளக் கடையில் (Museum Label) வாங்கலாம். 

 

சிங்கப்பூர் இந்திய மரபுடைமை