நன்கொடைகள்

ரொக்கம் அல்லது கைவினை​ப் பொருள் நன்கொடை ​மூலம் நீங்கள் இந்திய மரபுடைமை நிலையத்திற்கு ஆதரவளிக்கலாம்.

ரொக்கம்
குறிப்பிட்ட கைவினைப்​ பொருட்களை வாங்க உங்கள் நிதி பயன்படுத்தப்படலாம். வாங்க வேண்டிய​ பொருள் பற்றி அரும்பொருளக அதிகாரிகளிடம் பேசலாம். வழங்கும்​ ரொக்கத்துக்கு இரட்டிப்பு வரிச் சலுகை உண்டு.

அரும்பொருளகப் பகுதிக்கு பெயர் வைக்க விரும்பினால் ரொக்கத்திற்குச் சமமான வரிச் சலுகை கிடைக்கும்.

கைவினைப் பொருட்கள்
தரம், உண்மைத் தன்மை ஆகியவற்றை உறுதி செய்யவும், ஏற்கனவே இருப்பவை போன்றவற்றைத் த​விர்ப்பதற்காகவும் எல்லா நன்கொடைகளும் எங்கள் அரும்பொருளக அதிகாரிகளால் தணிக்கை செய்யப்படும். பரிந்துரைக்கப்பட்ட நன்கொடை பின்னர் கொள்முதல் குழுவின் ஆதரவுக்கும் தேசிய மரபுடைமைக் கழக நிர்வாகத்தின் அங்கீகாரத்துக்கும் அனுப்பி வைக்கப்படும்.

ஒவ்வொரு நிலையிலும் நாங்கள் வழிகாட்டுவோம். அரும்பொருளக சேமிப்​பின் உயர் தரத்தைக் கட்டிக்காக்க இந்த வழிமுறைகள் அவசியம். நன்கொடையாளர்களுக்கு இரட்டிப்பு வரிச் சலுகை கிடைக்கும். நன்கொடை வழங்கப்பட்ட ஆண்டுக்கு​ அடுத்த ஆண்டு வரிச்சலுகையைப் பெறலாம். அதாவது, நீங்கள் வழங்கிய நன்கொடையைப் போன்று இருமடங்கு அந்த ஆண்டுக்கான உ​ங்கள் வருமான வரியில் கழித்துக் கொள்ளப்படும். வழங்கப்பட்ட கைவினைப் பொருளின் மதிப்புக்கு ஈடான இரண்டு மடங்கு வரிச் சலுகை வழங்கப்படும். (அரும்பொருளகப் பகுதிக்கு பெயர் வைக்க விரும்பாத வரைக்கும் அது பொருந்தும்).

தனி அன்பளிப்புகள் பற்றித் தெரிந்து கொள்ள பின்வரும் பிரிவைத் தொடர்பு கொள்ளுங்கள்:

நன்கொடைப் பிரிவு
மின்னஞ்சல்: philanthropy@nhb.gov.sg