இந்திய மரபுடைமை நிலையத்தின் நிரந்தரக் கண்காட்சிக் கூடங்கள் (3-ஆம் மற்றும் 4-ஆம் மாடிகளில்) காலக்கிரமப்படி, முதலாம் நூற்றாண்டிலிருந்து 21ஆம் நூற்றாண்டை உள்ளடக்கிய ஐந்து கருப்பொருட்களில் அமைந்துள்ளன.

தொடர்புகளின் தொடக்கங்கள்: தெற்காசியாவிற்கும் தென்கிழக்காசியாவிற்கும் இடையே தொடர்புகள்
(1ஆம் நூற்றாண்டு முதல், 19ஆம் நூற்றாண்டு வரை)
தெற்காசியாவிற்கும் தென்கிழக்காசியாவுக்கும் இடையில் நிலவிய ஆரம்பகாலத் தொடர்புகளை மரபுடைமை ஆதாரங்களுடன் ஆராய்கிறது முதல் கண்காட்சிக்கூடம்.

வேர்களும் வழிகளும்: தொடக்கங்களும் புலம்பெயர்வும்
(19ஆம் நூற்றாண்டு - 21ஆம் நூற்றாண்டு)
சிங்கப்பூரிலும் தென்கிழக்காசியாவிலும் உள்ள இந்தியர்கள், காலனித்துவத்துக்கு முந்திய, காலனித்துவ, காலனித்துவத்துக்குப் பிந்திய காலங்களில் நிகழ்ந்த பல்வேறு குடியேற்ற அலைகளில் தங்கள் தொடக்கங்களைத் தேடுகின்றனர். இந்தக் கண்காட்சிக் கூடத்தின் 'வேர்கள்' பகுதி அவர்களின் பயணம், உடை, மொழி, விழாக்கள், சடங்குகள் ஆகியவற்றைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

முன்னோடிகள்: சிங்கப்பூரிலும் மலாயாவிலும் ஆரம்பகால இந்தியர்கள்
(19ஆம் நூற்றாண்டு - 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை)
சிங்கப்பூருக்கும் மலாயாவுக்கும் வந்து சேர்ந்த ஆரம்பகால இந்திய முன்னோடிகளையும் அவர்களது தொழில்களையும் அறிமுகம் செய்கிறது மூன்றாவது காட்சிக்கூடம்.
சிங்கப்பூர், மலாயா இந்தியர்களின் சமூக, அரசியல் எழுச்சி
(20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி)
இந்தியாவின் காலனித்துவத்துக்கு எதிரான தேசியவாத இயக்கங்கள் சிங்கப்பூர், மலாயா இந்தியர்களின் மீது ஏற்படுத்திய தாக்கத்தை ஆராய்கிறது நான்காம் கண்காட்சிக்கூடம்.

தேசியத்தின் உருவாக்கம்: சிங்கப்பூர் இந்தியர்களின் பங்களிப்பு
(1950களின் பிற்பகுதி முதல் தற்போது வரை)
பல்வேறு துறைகள், தொழில்கள் மூலம் நாட்டு நிர்மாணத்திற்கு சிங்கப்பூர் இந்தியர்கள் ஆற்றிய பங்களிப்பை படம் பிடித்து காட்டுகிறது கடைசி கண்காட்சிக்கூடம்.