எங்களின் சுய வழிகாட்டியின் உதவியுடன் லிட்டில் இந்தியாவின் மரபுடைமைப் பாதை வழி கடந்த காலத்தைக் கண்ணோட்டமிடுங்கள். நான்கு கிலோமீட்டர் பரப்பில் நாற்பதுக்கும் மேற்பட்ட மரபுடைமைத் தலங்களைக் கொண்டுள்ள இந்த லிட்டில் இந்தியா மரபுடைமைப் பாதை, உங்களை இந்த வட்டாரத்தின் வரலாற்றுச் சின்னங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கடைகளுக்கு இட்டுச் செல்லும் மூன்று வழித்தடங்களை வழங்குகிறது. இவை கருப்பொருள் சார்ந்து பிரத்தியேகமாக அமைக்கப்பட்டவை.
இந்திய மரபுடைமைப் பாதைக் கையேடு ஒன்றை எங்கள் நிலையத்தின் வருகையாளர் சேவை முகப்பில் பெற்றுக் கொள்ளுங்கள்.