Loading ...
RiceRiceRiceRiceRiceRice
பகுதி 1

பொங்கல் என்றால் என்ன?

பொங்கல் என்றால் என்ன?

பொங்கல் என்பது தமிழர்கள் கொண்டாடும் அறுவடைத் திருவிழா ஆகும்.  வயல்களில் நல்ல விளைச்சல் கிடைக்க உதவி செய்த சூரியன், இயற்கை அன்னை, பண்ணை விலங்குகள் அனைத்துக்கும் நன்றி சொல்லும் கொண்டாட்டமாகப் பொங்கல் அமைகிறது.

நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படும் பொங்கல், தை மாதத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. தை மாதம் மங்களகரமான மாதமாகக் கருதப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 14 அல்லது 15 அன்று தை மாதம் பிறக்கும்.

பொங்கல் பண்டிகையின்போது சமைத்து சாப்பிடும் உணவின் பெயரும் பொங்கல். இது ஓர் இனிப்பு கலந்த சாதம். “பொங்கு” என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து “பொங்கல்” உருவானது.
RiceRice

பொங்கலின் நான்கு நாட்கள்!

நாள்
1
2
3
4

பொங்கலின் நான்கு நாட்கள் என்னவென்று மேலும் தெரிந்து கொள்ள கீழே இருக்கும் விசைகளை அழுத்துங்கள்!

இங்கே அழுத்து!
?

பொங்கல் சின்னங்கள்

பொங்கல் திருவிழாவைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள கீழே இருக்கும் சின்னங்களை அழுத்தவும்!

புள்ளிக் கோலம்

பொங்கல் பண்டிகையின்போது பலரும் புள்ளிக் கோலம் வரைவார்கள். ஒவ்வொருவரின் வீட்டு வாசலிலும் புள்ளிக் கோலங்களைக் காணலாம். புள்ளிக் கோலம் வரைய, அரிசி மாவுடன் வடிவமாகப் புள்ளிகள் இடுவார்கள். பிறகு, அந்தப் புள்ளிகளை இணைத்து அழகான வடிவங்களை உருவாக்குவார்கள்.

சூரியன்

சூரியன் வாழ்வின் ஆதாரமாக வணங்கப்படுகிறது. ஏனெனில், பயிர்கள் நல்லபடியாக விளைய சூரியன் துணை புரிந்து, மனிதர்களுக்கு உணவளிக்கிறது.  

பொங்கல்

பொங்கல் என்றால் “பொங்கிப் பெருகுவது” என்று பொருள். எனவே, பானையிலிருந்து பொங்கி வழியும் பால், செழிப்பையும் நிறைவையும் குறிக்கிறது. இந்தப் பொங்கல், குடும்பத்தாருக்கும் வீட்டுக்கு வருவோருக்கும் பரிமாறப்படுகிறது.

தோரணம்

தோரணம் தமிழர்களின் பாரம்பரிய அலங்காரம். தென்னை ஓலை அல்லது மாவிலை பயன்படுத்தி தோரணங்கள் செய்வது வழக்கம்.

மாடு

மாடு வயலை உழுது, அமோகமான அறுவடைக்காகப் பாடுபட்டு உழைப்பதால் போற்றி மதிக்கப்படுகிறது.

கரும்பு

இந்தப் பருவத்தின் முக்கியமான அறுவடைகளில் ஒன்று கரும்பு, இது செழிப்பையும் நல்வாழ்வையும் குறிக்கிறது.  

கொண்டாட்டம்!

பானையிலிருந்து பால் சாதம் பொங்கி வழியும்போது, பொங்கல் கொண்டாடும் அனைவரும் “பொங்கலோ பொங்கல்” என்று குரல் எழுப்புவார்கள்.

பொங்கல் என்றால் என்ன?

புதிர் நேரம்

தொடங்கு
கேள்வி 1
பொங்கல் எந்தத் தமிழ் மாதத்தில் கொண்டாடப்படுகிறது?
தை
ஆவணி
கார்த்திகை
கேள்வி 2
புள்ளிக் கோலம் வீட்டுக்குள் செழிப்பை வரவேற்க வரையப்படுகிறது. இந்தக் கோலம் பொதுவாக எங்கே வரையப்படும்?
பொங்கல் பானையில்
உங்கள் வீட்டுச் சுவரில்
உங்கள் வீட்டு வாசலில்
கேள்வி 3
நீங்கள் பொங்கல் சமைக்கும் போது, பால் பானைக்கு வெளியே பொங்கி வழிய வேண்டும்! இது எதைக் குறிக்கிறது:
நல்லிணக்கத்தையும் நேர்மையையும்
செழிப்பையும் நிறைவையும்
மரியாதையையும் பொறுப்புணர்வையும்
அற்புதம்!
இனி கற்றல் பயணத்தைத் தொடர்வோம்!
நடவடிக்கை

நடவடிக்கை அட்டைகள்

நீங்கள் கற்றுக் கொண்டவற்றை யோசித்துப் பார்த்து, நண்பர்களுடன் அல்லது ஆசிரியருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்த அனுபவம் பிடித்திருந்ததா?
மேலும் தெரிந்துகொள்ளுங்கள்!

முகப்பு அடுத்து
Thank you! Your submission has been received!
Oops! Something went wrong while submitting the form.
RiceRice
தமிழ்
ENG