எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்

எங்களுடன் தொடர்பில் இருங்கள்! எங்களைப் பின்தொடருங்கள்

நாங்கள் நடத்தும் பொது வரவேற்பு நிகழ்ச்சிகள், பயிலரங்குகள், வீதியோரக் கண்காட்சிகள் பற்றிய விவரங்களை எங்களது சமூக ஊடகத் தளங்களில் உடனுக்குடன் வெளியிடுகிறோம்.

அதோடு, நமது கலாசாரத்தையும் பாரம்பரியங்களையும் எடுத்துரைக்கும் உயிரோவிய விளையாட்டுகள், நடன வகுப்புகள், காணொளிகள் போன்றவையும் எங்களது சமூக ஊடகத் தளங்களில் நிறைய உள்ளன.

நாங்கள் செய்பவற்றையும், பின்னணி நிகழ்வுகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள, ஃபேஸ்புக் மற்றும்/அல்லது இன்ஸ்டாகிராமில் எங்களைப் பின்தொடருங்கள்!

எங்களது அஞ்சல் பட்டியலில் சேருங்கள்

சிறப்புக் கண்காட்சிகள் பற்றிய தகவல்களையும், ஓராண்டுகால நிகழ்ச்சிநிரலையும் பெற்றிட, NHB_IHC@nhb.gov.sg மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கோரிக்கையை அனுப்பி வைத்து, எங்களது அஞ்சல் பட்டியலில் சேர்ந்து கொள்ளுங்கள்.

எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்

எங்கள் நிலையம் பற்றி உங்களுக்குக் கூடுதல் விவரம் தேவைப்பட்டால், அல்லது கருத்துகளோ யோசனைகளோ தெரிவிக்க விரும்பினால், NHB_IHC@nhb.gov.sg முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

படங்களுக்குக் கோரிக்கை

Roots.sg போன்ற இணையவாசல்களில் காணப்படும் எங்கள் திரட்டிலுள்ள படங்களை நீங்கள் பயன்படுத்த விரும்பினால், இந்த இணையப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்புங்கள். கோரிக்கையின்பேரில், உயர்தெளிவுமிக்கப் படங்களை எங்களால் வழங்க இயலும்.

காணாமல் போனவையும் கண்டெடுக்கப்பட்டவையும்

உங்கள் வருகையின்போது ஏதாவது ஒரு பொருளை நீங்கள் தொலைத்துவிட்டால், வருகையாளர் சேவை முகப்பில் உள்ள அலுவலர்கள் உதவி புரிவார்கள். மாறாக, 6291 1601 என்ற எண்ணில் அரும்பொருளகத்தின் பொது விசாரிப்பு தொலைபேசி சேவையை அழையுங்கள். எங்களால் முடிந்தவரை உதவி செய்வோம்.