அரும்பொருளகக் கடை பகார்த்தப் பொருள் ஒன்றை வாங்கி, எங்கள் அரும்பொருளகத்திற்கு ஆதரவளித்திடுங்கள்

எங்கள் நிலையத்தில் பெற்ற அனுபவத்தை நினைவில்கொள்ள சிற்றணிகள், நினைவுப்பொருட்கள் போன்றவற்றை வாங்கிச் செல்லுங்கள். முதல் மாடியில் உள்ள அரும்பொருளகக் கடையில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பலதரப்பட்ட பொருட்கள் உள்ளன.

காட்சிக்கூடங்களில் உள்ள கதைகளையும் கலைப்பொருட்களையும் பற்றிய பெருநூல்கள், உள்ளூர் கலாசாரத்தையும் வரலாற்றையும் விவரிக்கும் சிறுநூல்கள், சிறுவர்களுக்காகவே சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட மரபுடைமை நூல்கள் கடையில் கிடைக்கும்.

இந்திய மரபுடைமை நிலையத்தில் பெற்ற உங்கள் அனுபவத்தைக் குடும்பத்தார், நண்பர்கள், சக ஊழியர்கள் ஆகியோருடன் பகிர்ந்துகொள்ள, பல்வேறு வகையான அருங்கலைப்பொருட்களும் அன்பளிப்புகளும் உள்ளன.

எங்கள் கடையில் உங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்!

திறந்திருக்கும் நேரம்:

செவ்வாய்க்கிழமை - ஞாயிற்றுக்கிழமை: காலை 10.00 முதல் மாலை 6.00 மணி வரை.
திங்கட்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும்