“நீரிணையின் செட்டி மலாக்கா – பெரனக்கான் இந்தியச் சமூகங்களை அறிந்திடுவோம்” என்ற தலைப்பில் 2018 செப்டம்பர் முதல் 2019 மே வரை நடைபெற்ற சிறப்புக் கண்காட்சியை முன்னிட்டு இந்நூல் வெளியிடப்பட்டது. செட்டி மலாக்கா (அல்லது சிட்டி மலாக்கா) என்றழைக்கப்படுவோர், மலாக்கா சுல்தான் ஆட்சிக் காலத்தின்போது (15-16ஆம் நூற்றாண்டு) மலாக்காவில் குடியேறி, உள்ளூர் மலாய், சீனப் பெண்களைத் திருமணம் செய்துகொண்ட தமிழ் வணிகர்களின் வம்சாவளியினரைக் குறிக்கிறது. சிங்கப்பூரில் சுமார் 5,000 செட்டி மலாக்கா மக்கள் இருப்பதாகக் கணிக்கப்படுகிறது.
உங்கள் பிரதிக்கு Read A Book நாடுங்கள்.
விலை: 40 SGD (பொருள், சேவை வரிக்கு முன்)
ISBN: 9789811812774
தொகுப்பாளர்: இந்திய மரபுடைமை நிலையம்
மொழி: ஆங்கிலம்
வடிவம்: eBook-DRM
வெளியீட்டுத் தேதி: 2021
இந்திய மரபுடைமை நிலையத்தில் அக்டோபர் 2016 முதல் ஜூலை 2017 வரை நடைபெற்ற “லிட்டில் இந்தியாவில் முன்னொரு நாள்” கண்காட்சியை ஆவணப்படுத்துவதற்காக இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது. “லிட்டில் இந்தியா” என்ற அடைமொழி, உலகெங்கிலும் இந்திய, தெற்காசியச் சமூகங்கள் திரளும் ஒரு வட்டாரத்தைக் குறிக்கிறது. புலம்பெயர்ந்த சமூகத்தின் கலாசாரப் பன்மயத்தைப் பிரதிபலிக்கும் வட்டாரம் இது. சமூகத்தோடு கலந்துறவாட, சக இனத்தவரைக் குடியேறிகள் தேடிச்செல்லும் வட்டாரம் இது. அயல்நாட்டில் பூர்வீக அடையாளச் சின்னமாகத் திகழும் வட்டாரம் இது. “முன்பொரு காலத்தில் லிட்டில் இந்தியா” தொகுப்பு, வரலாற்றுக் கண்ணோட்டத்திலும் சமகாலக் கண்ணோட்டத்திலும் சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா வட்டாரத்தின் கதையைச் சொல்கிறது. மற்ற நாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த சமூகங்களுடனான ஒப்பீடுகளும் தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அக்கால, இக்காலத் தருணங்களைப் படைத்த இக்கண்காட்சியில், வரலாற்றுக் கலைப்பொருட்களுடன் முன்னணிக் கலைஞர்கள் குமாரி நாகப்பன், கே. ராஜகோபால், நவின் ராவன்சாய்க்குல் ஆகியோரின் சமகாலக் கலைப் படைப்புகளும் இடம்பெற்றன.
உங்கள் பிரதியை நிலையத்தின் கடையில் வாங்கிக் கொள்ளுங்கள்.
விலை: 40 SGD (பொருள் சேவை வரிக்கு முன்)
ISBN: 9789811414688
தொகுப்பாசிரியர்: நளினா கோபால்
மொழி: ஆங்கிலம்
வடிவம்: அச்சிடப்பட்ட புத்தகம்
பக்கங்கள்: 128
வெளியீட்டுத் தேதி: 2019
“சிங்கப்பூரில் சீக்கியர்கள்: சொல்லப்படாத கதை” என்ற தலைப்பிலான நூல், இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற்ற “சிங்கப்பூரில் சீக்கியர்கள்: சொல்லப்படாத கதை” சிறப்புக் கண்காட்சியில் ஆராயப்பட்ட கருப்பொருட்களுக்கு விளக்கமளித்து, கண்காட்சியின் கலைப்பொருட்களை ஆவணப்படுத்துகிறது. கல்வியாளர்கள், அரும்பொருளக அமைப்பாளர்கள், வரலாற்று வல்லுநர்கள், சமூக வல்லுநர்கள் உள்ளடங்கிய 31 எழுத்தாளர்கள் எழுதிய 26 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
உங்கள் பிரதிக்கு Read A Book நாடுங்கள்.
விலை: 40 SGD (பொருள் சேவை வரிக்கு முன்)
ISBN: 9789811839559
தொகுப்பாசிரியர்: டான் டாய் யொங்
மொழி: ஆங்கிலம்
வடிவம்: eBook-DRM
வெளியீட்டுத் தேதி: 2022
இரண்டு தொகுதிகள் கொண்ட“Sojourners to Settlers: Tamils in Southeast Asia and Singapore (ஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர்: தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்)” நூலை இந்திய மரபுடைமை நிலையமும் கொள்கை ஆய்வுக் கழகமும் கூட்டாக வெளியிட்டன. தமிழர் வட்டாரங்களுக்கும் தென்கிழக்கு ஆசிய அரசாட்சிகளுக்கும் இடையே நவீன காலத்திற்குமுன் நிலவிய தொடர்புகளையும், நவீனகால சிங்கப்பூரில் தமிழர் வரலாறு, பன்மயம் பற்றிய அறியப்படாத கூறுகளையும் இந்நூல் ஆராய்கிறது. தொல்பொருள் ஆய்வாளர்கள், கலை வரலாற்று வல்லுநர்கள், வரலாற்று வல்லுநர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் புனைந்த 27 அத்தியாயங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தென்கிழக்கு ஆசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழரின் வரலாறு குறித்த புதிய ஆய்வுகளையும் கருத்துகளையும் இந்நூல் தெரிவிக்கிறது.
உங்கள் பிரதிக்கு Read A Book நாடுங்கள். விலை: SGD 110 (பொருள் சேவை வரிக்கு முன்)
ISBN: 9789811419669
தொகுப்பாசிரியர்கள்: அருண் மகிழ்நன், நளினா கோபால்
மொழி: ஆக்கிலம்
வடிவம்: அச்சிடப்பட்ட புத்தகம்
பக்கங்கள்: தொகுதி 1 - 250 தொகுதி 2 - 277
வெளியீட்டுத் தேதி: 2020