வாடகைக்கு நிகழ்விடம் நன்கிணைக்கப்பட்ட வட்டாரத்தில் பொருத்தமான நிகழ்விடம்

உங்களது அடுத்த நிகழ்ச்சியை நடத்துவதற்குகந்த இடம் எங்களிடம் உண்டு. இரண்டாவது மாடியில் அமைந்துள்ள நிகழ்ச்சி அறை, நூல் வெளியீடுகள், கூட்டங்கள், ஆய்வரங்குகள், பயிலரங்குகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்குப் பொருத்தமானது.

ஏராளமான மரபுடைமைக் கடைகளும் நாவுக்கினிய உணவு வகைகளைப் பரிமாறும் உணவகங்களும் சூழ்ந்துள்ள கேம்பல் லேனில் எங்கள் நிலையம் அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இந்த வட்டாரத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கான ஆரம்ப இடமாய் எங்கள் நிலையம் திகழ்கிறது.

உங்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருவோருக்கு வசதியாக 18 பேருந்து சேவைகள் இந்த வட்டாரத்திற்கு வருகின்றன. லிட்டில் இந்தியா, ரோச்சோர் பெருவிரைவு இரயில் நிலையங்களும் அருகில் உள்ளன.

எங்கள் வசதிகளையும் கட்டணங்களையும் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பகுதியில் நீங்கள் படித்தறியலாம்.

வாடகை விண்ணப்பம் செய்ய, எங்கள் படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள். பூர்த்தி செய்த படிவத்தைக் குறைந்தது ஆறு வாரங்களுக்கு முன்னதாக அனுப்பி வையுங்கள். நாங்கள் ஐந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்குப் பதில் அளிப்போம்.