வசதிகள்

எங்கள் நிலையத்தில் வலம்வருதல்

வருகையாளர்கள் அனைவருக்கும் இனிய அனுபவம் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம். எனவே, நீங்கள் எங்களோடு செலவிடும் நேரத்தில் உங்களுக்குப் பயன்படக்கூடிய பல்வேறு வசதிகளை நாங்கள் வழங்குகிறோம். அவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

வருகை
  • கேம்பல் லேனில் எங்கள் கட்டடத்தின் முன்பகுதியிலும், கிளைவ் ஸ்திரீட்டில் கட்டடத்தின் பக்கத்திலும் சக்கரநாற்காலிகளையும் குழந்தை தள்ளுவண்டிகளையும் தள்ளிச் செல்வதற்கான சாய்வுப்பாதைகள் உள்ளன.
  • நிலையத்தின் வரவேற்புப் பகுதியில் குழந்தை தள்ளுவண்டிகளை நிறுத்திவைக்க இடம் உள்ளது. தயவுசெய்து முதல் மாடியில் உள்ள எங்கள் வருகையாளர் சேவை முகப்பை அணுகுங்கள். அங்குள்ள அலுவலர் உங்களுக்கு வழிகாட்டுவார்.
  • முதல் மாடியில் உள்ள வருகையாளர் சேவை முகப்பில், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சக்கரநாற்காலிகள் இலவசப் பயன்பாட்டுக்குக் கிடைக்கும். ஆனால், நீங்கள் சக்கரநாற்காலியில் எங்கள் காட்சிக்கூடங்களை வலம்வர எங்களால் உதவ இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
  • முதல் மாடியில் உள்ள சக்கரநாற்காலிக்கும் குழந்தை தள்ளுவண்டிக்கும் உகந்த மின்தூக்கியைப் பயன்படுத்தி எங்கள் காட்சிக்கூடங்கள் அனைத்தையும் சென்றடையலாம்.
காட்சிக்கூட அனுபவம்
  • எங்களது நிரந்தரக் காட்சிக்கூடங்களின் கேட்பொலி வழிகாட்டிகள் Smartify கைப்பேசி செயலியில் ஆங்கிலத்திலும் தமிழிலும் கிடைக்கும்.
  • எங்களது 5 நிரந்தரக் காட்சிக்கூடங்களை உங்களுக்குச் சுற்றிக்காட்டும் காணொளிகளை யூடியூப் ஊடகத்தளத்தில் ஆங்கில மொழியில் காணலாம். காணொளிகளில் ஆங்கில வசனவரிகளும் உண்டு
கழிப்பறைகள்
  • சக்கரநாற்காலியில் இருப்பவர்களுக்கான கழிப்பறைகள், எங்கள் நிலையத்தின் 2வது, 3வது, 4வது மாடிகளில் அமைந்துள்ளன.
  • சிறு பிள்ளைகள் உள்ள பெற்றோர்களும் இந்தக் கழிப்பறைகளைப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு ஆடை மாற்றும் வசதிகள் கழிப்பறைகளில் பொருத்தப்பட்டுள்ளன.
பாலூட்டும் அன்னையர்
  • அன்னையர்கள் முதல் மாடியில் உள்ள அரும்பொருளக வருகையாளர் சேவைக் குழுவினரை அணுகி, அருகிலுள்ள பாலூட்டும் அறைக்குச் செல்வதற்கு வழி கேட்கலாம்.

உங்கள் வருகையின்போது எந்தக் கட்டத்தில் உதவி தேவைப்பட்டாலும், எங்கள் அலுவலர்களை அல்லது முதல் மாடியில் உள்ள வருகையாளர் சேவைக் குழுவினரை அணுகுங்கள்.