புகைப்படமும் காணொளியும் எடுத்தல் எங்கள் நிலையத்தில் ஊடகப் பணிக்கான வழிகாட்டிகள்

நிலையத்திற்கு வருகை தருவோர் புகைப்படங்கள் எடுப்பதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், கலைப்பொருட்களைப் பாதுகாக்கவும், வருகையாளர்களுக்கு அரும்பொருளக அனுபவம் இனிதாக அமைவதை உறுதி செய்யவும் சில வழிகாட்டிகள் நடப்பில் உள்ளன.

எடுத்துக்காட்டாக, வணிக நோக்கமில்லாத தனிப்பட்ட பயன்பாட்டுக்கு மட்டுமே புகைப்படங்கள் எடுக்க அனுமதிக்கப்படும். ஆனால், ஒளிவீச்சுகளும் முக்காலித் தாங்கிகளும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பகுதியில் இதுபற்றி மேலும் படித்தறியலாம்.

நீங்கள் ஊடகத்துறையைச் சேர்ந்தவராக, அல்லது சமூக ஊடகத் தொகுப்புகளைத் தயாரிப்பவராக இருந்தால், எந்தவித ஊடகப் பணியையும் தொடங்குவதற்குக் குறைந்தது 6 வாரங்களுக்கு முன்னதாக இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து, காணொளியும் புகைப்படமும் எடுப்பதற்கு எங்களிடம் அனுமதி பெறவேண்டும். நாங்கள் 5 வேலை நாட்களுக்குள் உங்களுக்குப் பதில் அளிப்போம்.