பள்ளிகளின் வருகை

அரும்பொருளகத்தில் ஒரு நாள்

எங்கள் காட்சிக்கூடங்களில் காண்போரை வியப்பில் ஆழ்த்தும் பிரம்மாண்டமான காட்சிப்பொருட்கள் அமைந்துள்ளன. நாங்கள் தொடங்கப்பட்ட நாளிலிருந்து, சிறுவர்களை வசீகரித்து, வகுப்பறையில் நடைபெறும் வரலாற்றுப் பாடங்களில் புதுமையான கோணங்களைச் சேர்த்திருக்கிறோம்.

எங்கள் நிலையத்திற்கு வருகைதரும் சிறுவர்கள்:

  • அரவானின் தலையைக் கண்டு அதிசயிக்கலாம்;
  • மாளிகை போன்ற பத்தொன்பதாம் நூற்றாண்டு செட்டிநாட்டு வீட்டின் உயரமான வாயில் கதவின் வடிவில், தமிழ் நாட்டு செட்டியார் குடும்பத்தின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்;
  • பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள முல்டான் நகரிலிருந்து தருவிக்கப்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டு பள்ளிவாசலின் திகைக்க வைக்கும் முகப்புத் தோற்றத்தைக் கண்டு வியக்கலாம்! நீலப்பச்சை நிறத் தாழ்ப்பாள்கள் கொண்ட இந்த முகப்புத் தோற்றம், நிலையத்தின் 3வது, 4வது மாடிகளில் ஓங்காரமாய் உயர்ந்து காட்சியளிக்கிறது.

திரும்பும் பக்கமெல்லாம் பொக்கி‌ஷங்களும் பளபளக்கும் நவரத்தினங்களும் தென்படும் இந்திய மரபுடைமை நிலையம், சிறுவர்களும் மாணவர்களும் ஒரு நாளைச் செலவிடுவதற்கு உகந்ததோர் இடமாகத் திகழ்கிறது. அவர்கள் சிங்கப்பூரின் இந்தியச் சமூகமும் தென்கிழக்கு ஆசியாவில் புலம்பெயர்ந்த மக்களும் மேற்கொண்ட பயணத்தின் தடங்களைக் கண்டறிந்து, சிங்கப்பூரின் தலைசிறந்த முன்னோடிகளின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொண்டு, நவீன முப்பரிமாண ஒளிப்படங்களையும் இருவழித்தொடர்புக் காட்சிப்பொருட்களையும் பயன்படுத்தி பார்க்கலாம்.

வகுப்பறைக்கு அப்பாற்பட்ட ஓரிடத்தில் மரபுடைமையின்பால் ஆர்வம் வளர்க்க, எங்கள் நிலையத்திற்கு உங்கள் பள்ளி மாணவர்களுடன் வருகை மேற்கொள்ளுங்கள். எங்களது ஐந்து நிரந்தரக் காட்சிக்கூடங்களையும் பார்வையிட, வழிகாட்டிச் சுற்றுலாவைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது சொந்தமாகச் சுற்றிப் பார்க்கலாம். இந்தியக் கலாசாரத்தில் முழுமையாக மூழ்க, நாங்கள் நடத்தும் பல்வேறு பயிலரங்குகளையும் இருவழித்தொடர்பு கற்றல் பொருட்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


வருகைக்குப் பதிவு செய்யுங்கள்

எங்கள் நிலையத்திற்கு உங்கள் பள்ளி மாணவர்களுடன் வருகை மேற்கொள்ள, தேசிய மரபுடைமைக்கழகத்தின் BookMuseums@SG தளத்தின் வாயிலாக பதிவு செய்யுங்கள். மேல்விவரங்களுக்கு, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் குழுப் பதிவுகள் பகுதியைப் படித்துப் பாருங்கள்எங்கள் நிகழ்ச்சிகள் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால், NHB_IHC@nhb.gov.sg முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.