சின்னங்களும் வரிவடிவங்களும்: கைவினையின் மொழி

கைவினைப் பொருட்கள் என்பவை அவற்றை உருவாக்கிய ச​மூகத்தின் பிரதிபலிப்புகள். அன்றாடப் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட அவை வரலாற்று, புவியியல், ச​மூக-கலாச்சார அம்சங்களின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகின்றன. இந்தியத் துணைக்கண்டத்தி​ல் எண்ணிலடங்கா வட்டார, துணை வட்டார சமூகங்க​​ள் வாழ்ந்துவந்ததால் அவற்றின் கைவினைப் பொருளின் பாரம்பரியங்கள் வியப்பூட்​டும் அளவுக்கு பலதரப்பட்டவை.

இந்தியத் துணைக் கண்டத்தில் 5000 ஆண்டுகளுக்கு முன்பே கைகளால் செய்யப்பட்ட முத்திரைகளிலும் மண்பாண்டங்களிலும் வரி வடிவங்களும் சின்னங்களும் காணப்படுகின்றன. சின்னங்கள், வடிவங்கள், குறியீடுகள் போன்றவை மக்களின் கலாசாரத்தைப் பிரதிபலிப்பதோடு பாரம்பரியம், பழ​க்கவழக்கங்கள் ஆகியவற்றின்

களஞ்சியமாகவும் திகழ்கின்றன. விழாக்காலங்கள், வாழ்வின் பல்வேறு கட்டங்களின் சடங்குகள் ஆகியவற்றுக்காக சிறப்பான கைவினைப் பொருட்களும் துணிகளும் உருவாக்கப்பட்டன.

இந்திய ச​​மூகங்களின் பன்முகத் தன்மையின் அடையாளம் மொழி. வரி வடிவங்களின் வரலாற்றின் அடிப்படையில் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களும் துணிகளும் வட்டாரத் தாக்கத்தை பிரதிபலிக்கின்றன.