நீரிணையின் செட்டி மலாக்கா – பெரனக்கான் இந்தியச் சமூகங்களை அறிந்திடுவோம்

07 Sep 2018 - 05 May 2019

இந்திய மரபுடைமை நிலையம்

இலவசம்
இந்தியப் பெருங்கடலோரமும் தூரக் கிழக்கும் சந்திக்குமிடத்தில் அமைந்திருக்கும் மலாய் தீபகற்பம், பல கலாசாரங்களின் சங்கமமும் பன்மயமும் ஒருமிக்கும் வட்டாரமாக இருந்து வந்துள்ளது. இவ்வட்டாரத்தில் குடியேறிய ஏராளமான சமூகங்கள், தத்தம் சமூக-கலாசாரப் பழக்கங்களைத் தங்களுடன் எடுத்து வந்தனர். மொழி, சமயம், ஆடை அலங்காரம், சமையல்கலை முதலான பலவும் இதில் உள்ளடங்கும். இந்தப் பழக்கங்கள் காலப்போக்கில் உள்ளூர் சமுதாயத்தின் பன்மயக் கலாசாரங்களோடு ஒருங்கிணைந்து,
பன்மொழிச் சூழலும் கலப்பின இயல்பும் ஒருமித்திருக்கும் சூழ்நிலை உருவானது. இதற்கான சிறந்ததோர் எடுத்துக்காட்டு செட்டி மலாக்கா.
மேலும் தெரிந்துகொள்ளுங்கள்